விரைவில்.., ஜாவா பெராக் பைக் விற்பனைக்கு அறிமுகமாகிறது

jawa perak

குறைந்த விலை பாபர் ஸ்டைல் ரக மோட்டார் சைக்கிள் மாடலான ஜாவா நிறுவனத்தின் பெராக் பைக் இந்நிறுவனத்தின் முதல் வருட கொண்டாட்ட தினமான நவம்பர் 15 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்டு முன்பதிவு தொடங்கப்படலாம். முன்பாக இந்நிறுவனம் ஜாவா மற்றும் ஜாவா 42 என்ற இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மீண்டும் ஜாவா பிராண்டின் பெயரில் மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், சமீபத்தில் 90 ஆண்டுகள் ஜாவா பிராண்டு துவங்கியதை முன்னிட்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் 90 யூனிட்டுகள் விற்பனைக்கு வெளியிடபட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்ற 90 வாடிக்கையாளர்களுக்கும் நவம்பர் 15 ஆம் தேதி விநியோகிக்கப் பட உள்ளது. முதல் ஆண்டில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை எண்ணிக்கை விபரம் உட்பட, அடுத்த 18 மாதங்களில் வரவுள்ள மூன்று பைக்குகள் குறித்தும் முக்கிய விபரம் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டே காட்சிப்படுத்தப்பட்ட ஜாவா பெராக் மாடல் பாபர் ஸ்டைலில் அமைந்திருப்பதுடன் தற்போது இடம்பெற்றுள்ள ஜாவா , ஜாவா 42 மாடலிகள் உள்ள 293 சிசி என்ஜினுக்கு மாற்றாக 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்மாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக அறிமுகம் செய்த போது பவர் மற்றும் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜாவா பெராக் பைக் விலை ரூ.1.89 லட்சம் என அறிவிக்கப்பட்டது. தற்பொழுது விலை கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும் ரூ.2 லட்சத்திற்குள் அமையலாம்.