Automobile Tamilan

200hp பவருடன் ஸ்போர்ட்டிவ் கவாஸாகி Z H2 பைக் அறிமுகம்

kawasaki z h2

46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டுள்ள கவாஸாகி Z H2 சூப்பர்சார்ஜ்டூ ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் மிகவும் சக்திவாய்ந்த 200 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜினை கொண்டதாக வந்துள்ளது.

செமி ஃபேரிங் செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்களுடன் முழுமையான எல்இடி ஹெட்லேம்பை பெற்றுள்ளது. மிகவும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் டேங் அமைப்பில் பல்வேறு ஃபேரிங் பேனல்களை கொண்டுள்ளது. கவாஸாகி இசட் எச்2  மாடலில் 998 சிசி சூப்பர்சார்ஜ்டு பைக்கில் இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அதிகபட்சமாக 200 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 137 என்எம் டார்க் வழங்குகின்றது.

கவாசாகி இசட் எச் 2 பைக்கில் IMU உதவியின் மூலம் பவரை செயல்படுத்துகின்றது. ரெயின், ஸ்போர்ட், ரோடு மற்றும் ரைடர் ஆகிய நான்கு சவாரி முறைகள் உள்ளன. இவற்றில் தனிபயன் கஸ்டம் மோடை வழங்குகின்றது. கூடுதலாக, FULL (200 ஹெச்பி), Mid (148 ஹெச்பி) மற்றும் Low (98 ஹெச்பி) ஆகிய மூன்று பவர் முறைகள் அமைத்துக் கொள்ளலாம்.

முன்பக்க டயரில் டூயல் 290 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 226மிமீ டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது. இந்த பைக்கில் கவாஸாகியின் இன்டெலிஜென்ட் ஆன்ட்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் பெற்றுள்ளது. முன்புறத்தில், ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் ஷோவா மோனோஷாக் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. கவாஸாகி Z H2 பைக்கில் ப்ளூடூத் ஆதரவைப் பெற்று இந்த ஸ்மார்ட்போனில் இணைத்துக் கொள்ள கவாஸாகி Rideology ஆப் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட உள்ள கவாஸாகி Z H2 பைக் இந்தியாவிலும் அடுத்த ஆண்டு மத்தியிலும் வெளியாக உள்ளது.

Kawasaki Z H2 Image Gallery

Exit mobile version