ரூ.6.65 லட்சத்தில் கவாஸாகி Z650RS விற்பனைக்கு வெளியானது

0

Kawasaki Z650RS

இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் புதிதாக பெர்ஃபாமென்ஸ் ரக Z650RS மாடலின் விலையை ரூ.6.65 லட்சம் என நிர்ணையித்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள Z650 மாடலை விட ரூ.41,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

ரெட்ரோ வடிவமைப்பினை கொண்டுள்ள Z650RS மாடலின் தோற்ற அமைப்பு உயர ரக Z900RS பைக்கிலிருந்து டிசைன் அமைப்பினை பெறுகிறது. ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிஸ்ட்டருடன், வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டுடன் மிகவும் கிளாசிக்கான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

புதிய மல்டி-ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ள இசட் 650 ஆர்எஸ் பைக்கில் ‘கேண்டி எமரால்டு கிரீன்’ நிறத்தில் கோல்டன் பூச்சு உள்ளது. இரண்டாவது விருப்பமாக ‘மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே’ உடன் கருப்பு அலாய் வீல் பெறுகிறது.

192 கிலோ எடையுள்ள பைக்கை இயக்குவதற்கு 649சிசி பேரலல் ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டு 8000 ஆர்பிஎம்-ல் 68 பிஎஸ் மற்றும் 6700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கவாஸாகி Z650RS மாடலில் 120/70-பிரிவு முன் மற்றும் 160/60-பிரிவு பின்புற ரப்பர் கொண்ட 17-இன்ச் சக்கரம், 41 மிமீ டெலிஸ்கோபிக் போர்க் (125 மிமீ பயணம்) மற்றும் ப்ரீ-லோட் அட்ஜெஸ்ட் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் (130 மிமீ பயணம்) பெறுகிறது. 125 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று டூயல் செமி-ஃப்ளோட்டிங் 300 மிமீ டிஸ்க்குகளிலிருந்து இரட்டை பிஸ்டன் காலிப்பர்கள் மற்றும் பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட சிங்கிள் டிஸ்க் 220 மிமீ கொடுத்துள்ளது.