கேடிஎம் 390 அட்வென்ச்சர் அறிமுக குறித்த முக்கிய தகவல்

0

ktm 390 adv

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி வகிக்கும் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் பைக் மாடல் இந்திய சந்தையில் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என்ற முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

Google News

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இந்தியாவில் 6 புதிய மாடல்களை நவம்பர் மாதத்துக்குள் வெளியிட உள்ள நிலையில், இவற்றில் அர்பனைட் ஸ்கூட்டர், ஹஸ்க்வர்னா பைக் மற்றும் கேடிஎம் 390 ADV போன்ற மாடல்களும் இடம்பெற்றிருக்கலாம்.

கேடிஎம் 390 அட்வென்ச்சர்

இந்தியாவில் பிரீமியம் ரக சந்தையில் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக 390 அட்வென்ச்சர் மாடல், தற்போது விற்பனையில் கிடைக்கின்ற 390 டியூக் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சோதனை செய்யபட்டு வரும் மாடல் 19 அங்குல வீல் முன்புற டயரிலும், 17 அங்குல டயர் பின்புறத்திலும் வழங்கப்பட்டு , 44hp பவர் மற்றும் 37Nm டார்க் வெளிப்படுத்தும் 373.2cc என்ஜினை பெற்றிருக்கும்.

பொதுவாக கேடிஎம் நிறுவனம், தனது மாடல்களை EICMA மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்வது வழக்கமாகும். நவம்பர் மாதம் 5 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் 390 அட்வென்ச்சர் ரக மாடல் வெளியாகும் என ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.