Automobile Tamilan

ரூ.8.64 லட்சத்தில் கேடிஎம் 790 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது

790 duke

மிகவும் ஸ்டைலிஷான மற்றும் பவர்ஃபுல்லான கேடிஎம் 790 டியூக்  பைக் மாடல் இந்திய சந்தையில் ரூ.8,63,945 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 105 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 790 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பிஎஸ் 4 வெர்ஷனில் 100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

1290 சூப்பர் டியூக் R பைக்கின் ரேசிங் டிஎன்ஏ -வில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள 790 மாடலில் பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.

WP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

Exit mobile version