120 கிமீ ரேஞ்சு…, எம்2கோ X-1 மற்றும் சிவிடாஸ் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

0

m2go civitas

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்2கோ (M2GO) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம், சீனாவைச் சேர்ந்த வாங் யே (Wang Ye) நிறுவனத்துடன் இணைந்து ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லியில் எம்2கோ X-1 மற்றும் சிவிடாஸ் என்ற இரு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Google News

ரூ.5,100 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் எம்2கோ ஸ்கூட்டரின் விற்பனையில் நவம்பர் 20 முதல் எக்ஸ்-1 என்ற மாடலும், நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு சிவிடாஸ் என்ற மாடலும் விநியோகம் துவங்க உள்ளது.

இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் 2 கிலோவாட் போஷ் மின்சார மோட்டார் கொண்டதாக கிடைக்கிறது. சிவிடாஸ் வேகம் அதிகபட்சமாக 85 கிமீ மற்றும் எக்ஸ-1 ஸ்கூட்டரின் வேகம் 60 கிமீ ஆகும். ஸ்கூட்டர்களுக்கு லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு எக்ஸ் -1 சிறிய 60 வோல்ட் 26 ஏஎச் பேட்டரியையும், சிவிடாஸில் 72 வோல்ட் 29 ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது.

இரு ஸ்கூட்டர்களும் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சை வழங்க வல்லதாகும்.

m2go x-1 electric-scooter.

குறைந்த விலை எக்ஸ் -1 வழக்கமான மோட்டோ ஸ்கூட்டர் ஸ்டைலிங் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆன்டி-தெஃப்ட் அலாரம், யூ.எஸ்.பி சார்ஜிங் மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

ரெட்ரோ ஸ்டைலை பெற்ற சிவிடாஸ் முன்பக்கத்திலிருந்து வெஸ்பா போலவும் அதன் பக்க பேனல்கள் யமஹா ஃபாசினோவைப் போலவும் உள்ளன. இது வழக்கமான ஹாலஜென் வகை ஹெட்லேம்ப், எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், எதிர்ப்பு திருட்டு அலாரம் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவை கொண்டுள்ளது. இரு ஸ்கூட்டர்களின் டயர்களிலும் டிஸ்க் பிரேக், 12 அங்குல வீல் பொருத்தப்பட்டுள்ளது.

எம்2கோ X-1 ஸ்கூட்டரின் விலை ரூ.94,500

எம்2கோ சிவிடாஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,000

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

 m2go civitas electric scooter

மேலும், இந்நிறுவனம் அடுத்து 150 கிமீ ரேஞ்சு, அதிகபட்ச வேகம் 60 கிமீ மற்றும் 1.2 கிலோ வாட் மோட்டார் பெற்ற சி-ஒன் மற்றும் 80 கிமீ ரேஞ்சு, அதிகபட்ச வேகம் 60 கிமீ மற்றும் 1.2 கிலோ வாட் ஜூமா என இரண்டு குறைந்த ரேஞ்சு பெற்ற ஸ்கூட்டர்களை அடுத்த சில மாதங்களுக்குள் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

m2go civitasm2go X1