சிபிஎஸ் உடன் மஹிந்திரா கஸ்ட்டோ 110, கஸ்ட்டோ 125 ஸ்கூட்டர் அறிமுகம்

0

mahindra-gusto-125

கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்ற மஹிந்திரா டூ வீலர் நிறுவனத்தின் கஸ்ட்டோ 110 மற்றும் கஸ்ட்டோ 125 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் கட்டாயம் விதிமுறைக்கு ஏற்ற மாடலாக தற்போது கஸ்ட்டோ வெளியாகியுள்ளது.

Google News

கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு சார்ந்த வசதி பெறாத நிலையில் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கஸ்ட்டோ ஸ்கூட்டரில் பாதுகாப்பு வசதி இணைக்கப்பட்டதை தொடர்ந்து விற்பனைக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரில் 8 ஹெச்பி குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்துகிற 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 9 என்எம் ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி , ஃபிளீப் கீ , ஃபைன்ட் மீ லேம்ப் , கிக் ஸ்டார்ட் மற்றும் எல்இடி விளக்கு என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.

கஸ்ட்டோ 125 ஸ்கூட்டரில் 124.6 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.5 ஹெச்பி குதிரைசக்தி மற்றும் 10 என்எம் டார்க் வழங்குகின்றது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட சிபிஎஸ் இணைக்கப்பட்ட கஸ்ட்டோ தொடர் ஸ்கூட்டர் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Mahindra Gusto 110 DX CBS ரூ. 50,996

Gusto 110 VX CBS ரூ. 55,660

Mahindra Gusto 125 CBS ரூ. 58,137

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)