மஹிந்திரா கஸ்டோ RS லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வந்தது

0

mahindra gusto rs scooterரூ.51,510 விலையில் தோற்ற அமைப்பில் மாற்றங்களை பெற்ற மஹிந்திரா கஸ்டோ RS என்ற பெயரில் லிமிடெட் எடிசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா கஸ்டோ RS

mahindra gusto rs

இருசக்கர வாகன சந்தையில் பெரிய அளவில் பங்களிப்பை பெறாத நிலையிலும், மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய மாடல்களில் உள்ள கஸ்டோ 125 ஸ்கூட்டர் மாடலில் தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ், புதிய நிறம் மற்றும் ஆர்எஸ் பேட்ஜிங் ஆகியவற்றை பெற்றுள்ளது.

8.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.5 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இருசக்கரங்களிலும் 130மிமீ டிரம் பிரேக் , முன்சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஏர் ஸ்பிரிங் , பின்சக்கரத்தில் காயில் ஹைட்ராலிக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

கஸ்டோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்களாக சுசூகி ஆக்செஸ் 125 , ஆக்டிவா 125 போன்ற ஸ்கூட்டர்கள் விளங்குகின்றது. மேலும் கஸ்ட்டோ 110சிசி பிரிவிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஆர்எஸ் பேட்ஜ் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

Mahindra Gusto 125

 மஹிந்திரா கஸ்டோ RS விலை ரூ.51,510 (தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம்)