Automobile Tamilan

யமஹா மெஜெஸ்ட்டி எஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டர்.., இந்தியா வருகையா..!

ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யமஹாவின் புதிய மெஜெஸ்ட்டி எஸ் 155 மேக்ஸி ஸ்டைல் (Majesty S) ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் யமஹா ஆர்15 பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளது.

ஜப்பானில் ¥3,45,000 வெளியிடப்பட்டுள இதற்கு இந்திய மதிப்பில் ரூ.2.40 லட்சம் ஆக உள்ள விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மேக்ஸி ரக ஸ்டைல் ஸ்கூட்டரினை பொறுத்தவரை, ஆர்15 பைக்கிலிருந்து பெறப்பட்ட 15 ஹச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்க் வழங்குகின்ற 155cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தைப் பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் முன்புற அப்ரான் தோற்றம் அமைந்துள்ளது. எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி ஸ்டிரிப்புகள் உடன் மிக சிறப்பான இடவசதியை கொண்டதாக அமைந்துள்ள இருக்கையின் ஸ்டோரேஜ் வசதி போன்றவற்றை கொண்டுள்ளது.

7.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று 145 கிலோ எடையுடன் விளங்குகின்ற இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் 245மிமீ டிஸ்க் ரியர் டயரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்கு வரவுள்ள ஏப்ரலியா SXR 160 ஸ்கூட்டருக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் யமஹா மெஜெஸ்ட்டி எஸ் 155 விளங்க உள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.

Exit mobile version