எம்.வி அகஸ்டா 2019 ஆம் ஆண்டிற்கான Moto2 ரேஸ் பைக்கை அறிமுகப்படுத்துகிறது

0

பிரபல இத்தாலிய பைக் தயாரிப்பு நிறுவனமான எம்.வி அகஸ்டா நிறுவனம், நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உலக கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ்களில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 1952 முதல் 1974 ஆண்டுகளுக்கு இடையேயான கால கட்டத்தில் மொத்தமாக 75 உலக டைட்டில்களை இந்த நிறுவனம் வென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த சிசனுக்கான மோட்டோ2 சாம்பியன்ஷிப்களுக்கான பைக்கை வெளியிட்டுள்ளது.

சிவப்பு மற்றும் பிளாக் வண்ணங்களில், புதிய ரேஸ் பைக் சின்ஸ்டர் போன்ற தோற்றம் கொண்டது. ரேச்சிங் கார்களை தயாரிக்க சுவிஸ் நாட்டை சேர்ந்த மோடோ 2 அணியுடன் எம்.வி அகஸ்டா இணைந்துள்ளது. தற்போது சேஸ் சப்ளையர், சுடர் ஆகியவை எம்.வி அகஸ்டா திட்டத்திற்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Google News

இந்த பைக்கள் டிரேலிஸ் பிரேம்களுடன் CNC-மிஷினுடன் அலுமினியம் சைட் பிளேட்கள் மற்றும் அலுமினியம் ஸ்விங்கிராம் மற்றும் ஹைலின்ஸ் சஸ்பென்ஷன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 17 இன்ச் OZ ரேசிங் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. 2019 சீசன் மோட்டோ 2 வில் பங்கேறும் அனைத்து மோட்டார் சைக்கிள்களில் ட்ரையம் 765cc இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின் கொண்டதாக இருக்கும். எம்.வி அகஸ்டா பைக்கிலும் இதே போன்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய எம்.வி அகஸ்டா தலைவர் ஜியோவானி காஸ்டிக்லியோன், மீண்டும் மோட்டர்சைக்கிள் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வேண்டும் என்ற எங்கள் கனவு நினைவாகியுள்ளது. இதற்காக எங்கள் இஞ்சினியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் டிசைனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருந்த போதும் இன்னும் பல பணிகள் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. ஆனாலும் படிப்படியாக எங்களை மேம்படுத்தி கொண்டு மற்றவர்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்குவோம் என்றார்.

நிறுவன திட்டத் தலைவர்.பிரையன் கில்லன் பேசுகையில், சில ஆண்டுகளுக்கு பின்னர் நாங்கள் மோட்டர் சைக்கிள் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் 2019 ஆண்டு மோட்டோ2 வகைகளில் சில காட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு, எங்கள் தொழில்நுட்பத்தை வெளிகாட்ட சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் நாங்கள் சூப்பர்பைக் மற்றும் சூப்பர்ஸ்போர்ட்களில் பங்கேற்றுள்ளோம் என்றார்.

மேலும் பேசிய அவர் ,கடந்த காலங்களில் 75 உலக டைட்டில்களில் எம்.வி அகஸ்டா வெற்றி பெற்றுள்ளது. அதில் 18 டைட்டில்கள் 500cc வகையில் பெறப்பட்டதாகும். இந்த போட்டிகளில் புகழ்பெற்ற ஜான் சர்டிஸ், கேரி ஹொக்கிங், மைக் ஹெயில்வுட், ஃபில் ரீட் மற்றும் கியாகோமோ அகோஸ்டினி போன்றவர்கள் பங்கேற்றனர். ரேஸ்களில் பங்கேற்பது நாங்கள் இரண்டு ஸ்டிரோக் மெச்சின்களை 70-களில் அறிமுகம் செய்ய போதே தொடங்கி, தொடர்ந்து வருகிறது. எதிர்வரும் மோட்டோ2 சீசனிலும் எம்.வி அகஸ்டா மீண்டும் வெற்றி வாகை சுசும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.