MV அகஸ்டா RVS #1 வெளிவந்தது..!

இத்தாலின் MV அகஸ்டா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் சிறப்பு வாகனங்கள் பிரிவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Reparto Veicoli Speciali வாயிலாக முதல் MV அகஸ்டா RVS #1 வெளியானது.

MV அகஸ்டா RVS #1

MV அகஸ்டா ஆர்.வி.எஸ் மோட்டார்சைக்கிள் என வெளியிடப்பட்டுள்ள RVS என்றால் Reparto Veicoli Speciali என இத்தாலியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் என்னவென்றால் சிறப்பு வாகன துறை அதாவது ஆங்கிலத்தில் Special Vehicles Department என்பதாகும்.

எம்வி அகஸ்டா டிராக்ஸ்டெர் 800 பைக்கினை அடிப்பையாக கொண்டு கஸ்டமைஸ் வசதிகளுடன் பல்வேறு கூடுதலான வசதிகள் மற்றும் தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள  RVS #1 மாடலில் சாதாரன மாடலை விட கூடுதலாக 10 ஹெச்பி வரை ஆற்றல் உயர்த்தப்பட்டு 150 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்ற 3 சிலிண்டர் 803சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு விதமான கஸ்டமைஸ் வசதிகளாக எல்இடி ஹெட்லேம்ப், எல்இடிடெயில் விளக்குகள், டைட்டானியம் கொண்டு வடிவமைக்கப்பட்ட புகைப்போக்கி போன்றவற்றுடன் மிக சிறப்பான இந்த மாடலில் சிவப்பு கண் கொண்ட மன்டை ஓடு படம் பல்வேறு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது. சாதாரன மடலை விட 8 கிலோ வரை எடை குறைக்கப்பட்டு 160 கிலோ மட்டுமே கொண்டுள்ள இந்த ஆர்விஎஸ் #1 பைக்கில் மொத்தம் 95 அலகுகள் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ளது. விலை மற்றும் விற்பனை விபரங்களை எம்.வி அகஸ்டா இன்னும் வெளியிடவில்லை.

MV Agusta RVS #1 Images and Video

 

Exit mobile version