புதிய பஜாஜ் சிடி 100 பைக்கில் கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்

Bajaj ct100 price details

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குறைந்த விலை பைக் சிடி 100 கிக் ஸ்டார்ட் மாடலில் கூடுதலாக பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டு ரூ. 46,432 (விற்பனையகம் டெல்லி) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள சிடி100 பைக்கில் இருந்து மாறுபட்ட தோற்ற அமைப்பினை வழங்கும் வகையில் 8 விதமான புதிய வசதிகளை இணைத்துள்ளது. பெட்ரோல் டேங்கில் ரப்பர் பேட்ஸ், முன்புற சஸ்பென்ஷனில் கைட்டர்ஸ், ஹேண்டில் பாரின் குறுக்கில் கிராஷ் பார், புதிய இருக்கை கூடுதலான சொகுசு தன்மை வழங்கும், அனலாக் கிளஸ்ட்டரில் இப்போது எரிபொருள் இருப்பினை அறிய உதவும் மீட்டர், புதிய அகலமான கிராப் ரெயில், புதிய க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர், மற்றும் கூடுதலான நீளம் பெற்ற மிரர் பூட் கொண்டதாக வந்துள்ளது.

மற்றபடி தொடர்ந்து 102cc பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக .9 PS at 7500 RPM மற்றும் 8.34 Nm at 5500 RPM -ல் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டிருக்கின்றது.

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பஜாஜ் சிடி 100 பைக்கின் மைலேஜ் மிக சிறப்பாக வழங்கவல்லதாகும்.முன்புற டயரில் 130 மிமீ டிரம் மற்றும் 110 மிமீ டிரம் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டிஸ்க் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆப்ஷனை இந்நிறுவனம் வழங்கவில்லை.

பஜாஜ் CT 100 பைக் விலை ரூ.46,432

new bajaj ct100

Web Title : New Bajaj CT100 Launched With more Features