பவர்ஃபுல்லான பஜாஜ் பல்சர் 250 பைக் களமிறங்குகிறது

0

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சர் வரிசை பைக்குகளில் புதிதாக மிகவும் பவர்ஃபுல்லான பஜாஜ் பல்சர் 250 பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஜாஜ் நிறுவனம் 2001 ஆம் ஆண்டு முதல் பல்சர் வரிசையில் பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது பல்ஸர் 135, பல்ஸர் 150, பல்ஸர் 180, பல்ஸர் 200, பல்ஸர் 220 என மொத்தம் 5 வகையான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்து வரும் நிலையில், அதிகரித்து வரும் பிரிமியம் பைக் விற்பனையை கருத்தில் கொண்டு புதிதாக 250சிசி என்ஜின் பெற்ற மாடலை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பனிகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

பல்ஸர் 250 பைக்கில் இந்நிறுவனத்தின் இனை நிறுவனமாக விளங்கும் கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 250 பைக்கில் இடம்பெற்றுள்ள 250சிசி என்ஜினை பெற்றிருக்கும். இந்த என்ஜின் 30 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என்பதனால், இதனை விட சற்று குறைவாக 28 ஹெச்பி பவர் மற்றும் 23 என்எம் டார்க் வழங்கும் வகையில் பல்சர் 250 என்ஜின் அமைந்திருக்கலாம். இதில் 6 வேக ஸ்பீடு ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடியதாக இருக்கலாம்.  இந்த என்ஜின் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

புதிய பஜாஜ் பல்சர் 250 பைக் மாடல் முழுமையான உற்பத்தி நிலை மாடலாக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் காட்சிக்கு வரக்கூடும். விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் கிடைக்கலாம்.