புதிய கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் ரூ.5.19 லட்சம் விலையில் புதிய கவாஸாகி Z650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  68hp பவரை வெளிப்படுத்தும் 649 சிசி என்ஜினை பெற்று விளங்குகின்றது.

2017 Kawasaki Z650

Google News

கவாஸாகி Z650

  • ரூ.5.19 லட்சத்தில் புதிய கவாஸாகி இசட்650 பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
  • ER-6n பைக்கிற்கு மாற்றாக புதிய Z650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவை நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட்650 ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் மாடலில் அதிகபட்சமாக 68hp ஆற்றலை வெளிப்படுத்தும் 649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 65.75Nm டார்க்கினை வழங்கும். இதில் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனுடன் கூடிய 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

kawasaki Z650 front

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரையும் பெற்று விளங்குகின்றது.  முன்பக்க டயரில் 300 mm டூயல் டிஸ்க் பரேக் வசதியுடன் பின்புறத்தில் 220 mm ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பின்புற டயரில் பெற்றுள்ளது.

இலகு எடை மற்றும் உறுதிமிக்க டியூப்லெர் ஸ்டீல் டெர்ரில்ஸ் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டடுள்ள இசட்650  பைக் முந்தைய ER-6n மாடலை விட 19 கிலோ எடை குறைவானதாக விளங்குகின்றது.

2017 Kawasaki Z650

எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் ரூ.5.19 லட்சத்தில் கவாஸாகி இசட்650 பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்கலாமே..! கவாஸாகி பைக் செய்திகள்..!