புதிய ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகமானது

பிரிட்டிஷ் நாட்டின் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ட்ரைடென்ட் 660 ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக்கினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

இன்லைன் மூன்று சிலிண்டர் 660சிசி இன்ஜின் பெற்றுள்ள ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 மாடல் அதிகபட்சமாக 81hp பவர் மற்றும் 64Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு கூடுதலாக சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரிஸ் மூலமாக க்விக் ஷிஃப்டரை பெறலாம்.

ட்ரைடென்ட் 660 மாடலில் ரோடு மற்றும் ரெயின் என இரு விதமான ரைடிங் மோட் உடன் டிராக்‌ஷன் கன்ட்ரோல், ரைட் பை வயர் திராட்டிள், சுவிட்சபிள் முறை அல்லாத ஏபிஎஸ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆதரவுடன் கூடிய ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன், பின்புற டயரில் சிங்கிள் பிஸ்டன் காலிப்பர் டிஸ்க் மற்றும் முன்புறத்தில் இரண்டு பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 310 மிமீ இரட்டை டிஸ்க்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

850 மிமீ இருக்கை உயரம், 17 அங்குல வீல் உடன் ட்யூபெலர் ஸ்டீல் சேஸிஸ் கொண்டுள்ள ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 பைக்கின் எடை 189 கிலோ மட்டுமே ஆகும்.

இந்திய சந்தையில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் சிகேடி முறையில் தயாரிக்கப்பட்டு ரூ.8 லட்சத்திற்குள் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Web Title : Triumph Trident 660 revealed

Exit mobile version