60 கிமீ ரேஞ்சு.., ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

0

okinawa lite

50-60 கிமீ ரேஞ்சை வழங்க வல்ல ஒகினாவா நிறுவனத்தின் புதிய லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ரூ.59,990 விலையில் விற்பனைக்கு இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மித வேகம் கொண்ட இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும்.

Google News

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் குறைந்த விலை ஸ்கூட்டர் முதல் உயர் ரக பிரைஸ் மாடல் வரை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் புதிய ஓகினாவா லைட் பேட்டரி ஸ்கூட்டர் குறைந்த வேகத்தை வழங்கும் மாடலாகும்.

ஒகினாவா லைட் மின்சார ஸ்கூட்டரில்  250 வாட், BLDC மின்சார 40 வோல்ட் மோட்டருடன், 1.25 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 25 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக பயணிக்கும் திறன் கொண்டுள்ளது மற்றும் முழுமையான ஒரு முறை சார்ஜிங் செய்தால் அதிகபட்சமாக 50-60 கி.மீ  பயணக்கும் தொலைவை வழங்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜிங் செய்ய சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகும்.

லைட் ஸ்கூட்டரில் அலுமினிய அலாய் வீல்களுடன் இ-ஏபிஎஸ் உடன் ரீஜெனரேட்டிவ் செய்யும் பிரேக்கிங் செயல்பாட்டை பெற்றுள்ளது. சுமார் 150 கி.மீ எடையும், 1790 மிமீ நீளமும், 710 மிமீ அகலமும், 1190 மிமீ உயரமும் கொண்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பெற்றுள்ளது.

okinawa-lite-scooter

புதிய ஒகினாவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹாஸார்ட் சுவிட்ச், இன்பில்ட் ஃபட் ரெஸ்ட் மற்றும் எல்இடி ஸ்பீடோமீட்டர் போன்றவற்றுடன் எல்இடி ஹெட்லைட், எல்இடி விங்கர்ஸ், எல்இடி டெயில்லேம்ப்ஸ், தானியங்கி எலக்ட்ரானிக் சிஸ்டம், செல்ஃப் ஸ்டார்ட் புஷ் பொத்தான் போன்றவற்றை கொண்டுள்ளது.

ஆராய் சான்றிதழ் பெற்றுள்ள ஒகினாவா லைட் ஸ்கூட்டருக்கு லைசென்ஸ், வாகனப் பதிவு அவசியமில்லை.