Automobile Tamilan

ஓலா எலக்ட்ரிக் கையகப்படுத்திய இட்ர்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நெதர்லாந்து நாட்டின் இட்ர்கோ (Etergo) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இடர்கோ ஆப்ஸ்கூட்டர் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Etergo நிறுவனம், மிக சிறப்பான டிசைனை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ்கூட்டர் (AppScooter) 2018 ஆம் ஆண்டு முதன்முறையாக விற்பனைக்கு வெளியானது. இந்த மாடலை இந்தியாவிற்க்கு கொண்டு வருவதனை ஓலா உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்ஸ்கூட்டரினை மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சங்களை கொண்டிருப்பதுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்று மூன்று பேட்டரியை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பேட்டரியும் 80 கிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளதால், முழுமையான சிங்கிள் பேட்டரி சார்ஜில் 240 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.

0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்ற ஆப்ஸ்கூட்டர் வை-ஃபை, ப்ளூடூத் ஆதரவு, நேவிகேஷன், பாடல்கள், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.

இடர்கோ நிறுவனத்தை கையகப்படுத்திய ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைவர் பவிஷ் அகர்வால் கூறுகையில்,

எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்வதில் மின் வாகனங்கள் முக்கிய பங்காற்றும். கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் மின் வாகனங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் கார் விற்பனையை விட இரண்டு மடங்காக இரு சக்கர வாகன விற்பனை பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் மிக சிறப்பான டிசைன், நுட்பம் மற்றும் திறன் பெற்ற எங்களது மாடல் எங்களுக்கு வளமையான எதிர்காலத்தை வழங்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓலா எலக்ட்ரிக் பல்வேறு முன்னணி மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் சார்ஜிங், பேட்டரி ஸ்வாப் தொடர்பான முயற்சிகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version