200 கிமீ ரேஞ்சு.., ஆர்க்ஸா மாண்டிஸ் எலெக்ட்ரிக் பைக் வெளியானது

0

orxa Mantis e-bike

கோவாவில் நடைபெற்று வரும் இந்தியா பைக் வீக் 2019 அரங்கில் ஆர்க்ஸா எனெர்ஜிஸ் (Orxa energies) என்ற ஸ்டார்-அப் நிறுவனம், சிங்கிள் சார்ஜில் 200 கிமீ பயணிக்கும் திறன் பெற்ற மாண்டிஸ் எலெக்ட்ரிக் பைக் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.

இ-மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் மாண்டிஸ் பைக்கில் 9kWh லித்தியம் ஐயன் பேட்டரியை பயண்படுத்தி அதிகபட்மாக மணிக்கு 140 கிமீ வேகத்தை எட்டுவதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ வரம்பை பெறலாம் என தெரிவிக்கின்றது. ஆறு பிரிவுகளாக பேட்டரியை பிரித்து மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்டு இந்த மாடலில் முழுமையான சார்ஜிங் செய்ய 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாடலில் உள்ளதை போன்றே இந்த மாடலில் பேட்டரியை ஸ்வாப் செய்து கொள்ள இயலும், இருக்கின்ற பேட்டரியை மாற்றி விட்டு வேறு பேட்டரியை இணைத்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதேபோன்ற பெர்ஃபாமென்ஸ் எலெக்ட்ரிக் பைக் மாடலை அல்ட்ராவைலெட் F77 என்ற பெயரில் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.25 லட்சத்தில் வெளியானது.

orxa Mantis cluster

இந்த பைக்குகளுக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்க்ஸா மாண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு 200 கிமீ என்பது மிகப்பெரிய பலமாக அமைய வாய்ப்புள்ளது. 2020 ஆம் ஆண்டின் மத்தியில் ரூ. 3.50 லட்சத்தில் ஆர்க்ஸா மாண்டிஸ் விற்பனைக்கு வெளியாகலாம்.

orxa Mantis rear