ரூ.38,000 முதல் ஆரம்பம் 6 எலக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்குகளை வெளியிட்ட போலாரிட்டி

0

polarity smart bikes

புனேவை தலைமையிடமாக கொண்ட போலாரிட்டி ஸ்மார்ட் பைக் நிறுவனம், தனிநபர் மொபைலிட்டி வாகனங்களை இந்தியாவில் ரூ.38,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்போர்ட் மற்றும் எக்ஸ்கூட்டிவ் என இரு பிரிவுகளில் மொத்தமாக 6 வாகனங்களை வெளியிட்டுள்ளது. ரூ.1001 முன்பதிவு கட்டணமாக திரும்ப பெறக்கூடிய வகையில் வசூலிக்கப்பட உள்ளது.

Google News

ஸ்போர்ட் என்ற பிரிவில் S1K, S2K, மற்றும் S3K அடுத்து எக்ஸ்கூட்டிவ் பிரிவில்  E1K, E2K மற்றும் E3K போன்றவை ஆகும்.

வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த பைக்குகள் முதல் வருடத்தில் 15,000 யூனிட்டுகளை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் முதல் 70,000 யூனிட்டுகளுக்கு மஹாராஷ்டிரா மாநில அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கின்றது.

போலாரிட்டி பைக்கில்  Brushless Direct Current (BLDC) மோட்டார் மற்றும் லித்தியம் ஐன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பெடல் அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளதால் முழுமையான ரேஞ்ச் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக இந்த பைக்குகளில் அதிகபட்சமாக 100 கிமீ தொலைவினை பயணிக்கலாம். டாப் ஸ்பீடு 80 கிமீ ஆக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக S3K வேரியண்ட் மட்டும் அதிகபட்சமாக 100 கிமீ டாப் ஸ்பீடை வழங்கும். மேலும் ஜிபிஎஸ், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி, ஸ்மார்ட்போன் போன் ஆப் வாயிலாக பல்வேறு வசதிகளை பெறலாம். அனைத்து மாடல்களும் 55 கிலோ கிராமிற்கு குறைவான எடை கொண்டிருப்பதுடன் 6 மாடல்களில் மொத்தமாக 36 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. மற்ற மாடல்களின் விபரம் கீழே உள்ள படத்தில் கிடைக்கின்றது.

போலாரிட்டி பைக் விபரம்

 

போலாரிட்டி பைக்ஸ் விலை (ex-Showroom)
E1K ₹ 38,000
E2K ₹ 65,000
E3K ₹ 1.05 lakh
S1K ₹ 40,000
S2K ₹ 70,000
S3K ₹ 1.10 lakh

polarity s3k