எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பாளரான டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

0

2019 Tork T6X Launchஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் ஸ்டார்ட் அப் தயாரிப்பாளரான புனேவைச் சேர்ந்த டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் டார்க் T6X பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

டி 6 எக்ஸ் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. T6X பைக் தயாரிப்பிற்கான முதற்கட்ட பணிகள் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. முதல் முன்மாதிரி செப்டம்பர் 2016 வெளியிடப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஐந்து முன்மாதிரிகள் உருவாக்கப்பட்ட பின்னர் T6X எலெக்ட்ரிக் பைக் வடிவமைக்கப்படது.

Google News

டார்க் T6X மின்சார பைக்

டார்க் T6X பைக் மாடலில் இடம்பெற்றுள்ள 6 KW (8bhp) பவரை வெளிப்படுத்தக்கூடிய மின்சார மோட்டார் வாயிலாக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் டி6எக்ஸ் பைக் 200சிசி பெட்ரோல் பைக்கிற்கு இணையானதாக விளங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் டார்க் 27 Nm ஆகும். 60 நிமிடத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஏறும்வகையில் வேகமான சார்ஜிங் முறையை பெற்றுள்ளது. T6X பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும். 130 கிலோகிராம் எடை கொண்டதாகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது. மேலும் 4.3 இன்ச் டிஎஃப்டி தொடுதிரை இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டர் , ஆப் தொடர்பு, கிளவூட் சேமிப்பு என பல வசதிகளை பெற்றுள்ளது. எதிர்காலத்தில் ஏபிஎஸ்ஆப்ஷனலாக பெற உள்ளது. இதன் பேட்டரியின் ஆயுட்காலம் 80,000 முதல் 1,00,000 கிமீ ஆகும். T6X பைக்கில் இடம்பெற்றுள்ள  TIROS (Tork Intuitive Response Operating System) அமைப்பு ஆற்றலை மிக சிறப்பான முறையில் பராமரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் இதன் வாயிலாக இருவிதமான டிரைவிங் மோடினை அதாவது ஸ்போர்ட்டிவ் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டினையும் வெளிப்படுத்தும்.

முதலீட்டைப் பற்றி பேசிய திரு ரத்தன் டாடா, “கடந்த சில ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் மீதான அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றான முயற்சியில் ஈடுபட்டுள்ள டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நல்லதொரு ஆதரவை வழங்க விரும்புகிறேன். ஒவ்வொரு இந்திய தொழில்முனைவோரிலும் இருக்க வேண்டிய முனைப்பு இதுதான் என்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், என குறிப்பிட்டுள்ளார்.

டார்க் மோட்டார்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கபில் ஷெல்கே கூறுகையில், “திரு டாடா உலகின் மிக முக்கியமான வணிகத் தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது அலுவலக பிரதிநிதி தொழிற்சாலைக்கு வருகை தந்தார். எங்கள் தயாரிப்பை பற்றி ஆராய்ந்து, தயாரிப்பை மதிப்பீடு செய்தார், மற்றும் பைக்கினை ரைடிங் செய்து அதன் விபரத்தை சோதித்து அறிந்து கொண்டார். அதன் பிறகு திரு. டாடா அதன் பிறகு எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். இந்திய வாகனத் துறை மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளது.

திரு. ரத்தன் டாடா இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ள தொகை பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிறுவனத்தில் முன்பே பாரத் ஃபோர்ஜ் மற்றும் ஓலா கேபின் தலைவர் பவிஷ் அகர்வால் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.