ரெப்சால் ஹோண்டா ஹார்னெட் 2.0 விற்பனைக்கு வெளியானது

0

repsol honda hornet 2 0 edition

ரெப்சால் ஹோண்டா மோட்டோ ஜிபி கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை 800 தொட்டுள்ளதை தொடர்ந்து சிறப்பு ஹார்னெட் 2.0 மாடலை ரூ.1,32,188 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலையை நிர்ணையித்துள்ளது. சாதாரன வேரியண்ட்டை விட ரூ.2,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

Google News

ரெப்சால் ஹார்னெட் 2.0 பைக்கில் ஆரஞ்சு வண்ண சக்கரங்களுடன் ரெப்சோல் ஹோண்டா மோட்டோஜிபி பைக்கின் ரேசிங் நிறத்தை ஈர்க்கப்பட்ட வண்ணத்தை பெற்றுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் ரேசிங் டி.என்.ஏ பற்றி ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகாட்டா கூறுகையில், “ஹோண்டாவின் வரலாற்றில் ரேசிங் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஹோண்டா மற்றும் ரெப்சால் ரேஸ் டிராக்கில் வெற்றிகரமான சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. மேலும், சமீபத்திய 800 வது மோட்டோஜிபி வெற்றி ஹோண்டாவின் பந்தய திறனுக்கு மற்றொரு சான்றாகும். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் இந்திய ரேசிங் பிரியர்களுக்கு ஹார்னெட் 2.0 மற்றும் டியோவின் ரெப்சோல் ஹோண்டா பதிப்புகளை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

Web title : Repsol Honda editions of Hornet 2.0 launched in India