ரெட்ரோ ஸ்டைல் ஹோண்டா CB-F கான்செப்ட் வெளியானது

0

Honda CB F concept

ஹோண்டாவின் 60 ஆண்டுகால சிபி வரிசை வரலாற்றில் உருவான ரெட்ரோ ஸ்டைல் பெற்ற சிபி-எஃப் கான்செப்ட் பைக் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் காட்சிக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

CB1000R பைக்கின் தோற்ற உந்துதலை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய CB-F மாடலில் 998 சிசி இன் லைன் நான்கு சிலிண்டர் DOHC பெற்றதாகவும், 143hp பவர் மற்றும் 104Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. வட்ட வடிவ ஹெட்லைட் பெற்று ஹோண்டாவின் ரெட்ரோ லோகோ பெற்றதாகவும், யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

இந்த கான்செப்டினை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வது பற்றி எந்த உறுதியான தகவலும் இப்போதைக்கு இல்லை.

Honda CB F concept side

Source: Honda