மார்ச் 5 ஆம் தேதி 10.30 மணிக்கு புக்கிங் ஆரம்பம்.. ரிவோல்ட் மோட்டார்ஸ் சென்னை வருகை

0

rv400 e-bike

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம், சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி தனது மின்சார பைக்குகளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னையில் முதற்கட்டமாக இரண்டு டீலர்களை துவங்க உள்ளது. ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 என இரு மின்சார பைக் மாடலும் அறிவிக்கப்பட உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு ரிவோல்ட் (revoltmotors.com) இணையதளத்தில் துவங்கப்பட உள்ளது.

Google News

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

revolt chennai launch date

குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 36 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 38 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 38 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் வேரியண்டில் கூடுதலாக இலவசமாக முதல் மூன்று வருடங்களில் டயர் மட்டும் ஒரு முறை மாற்றித் தரப்படலாம்.

revolt hub

ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963

ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963

(ஆன்ரோடு விலை)

ரிவோல்ட் ஆர்வி 400 ரூ .98,999 மற்றும் ஆர்வி 300 ரூ .84,999 (எக்ஸ்ஷோரூம்). கூடுதலாக ஆர்டிஓ பதிவு, வாகன காப்பீடு, மற்றும் மூன்று வருடத்திற்கான 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டினை இயக்குவதற்கு கட்டணம் ரூ.5,000 ஆகியவை வசூலிக்கப்பட உள்ளது.