ஜூன் 18 ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாகிறது

ரிவோல்ட் ஸ்மார்ட் பைக்

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் ஜூன் 18 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக மொபைல் தயாரிப்பில் பிரபலமாக விளங்கிய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துனை நிறுவனமாக விளங்குகின்றது.

இந்தியாவின் முதல் AI அல்லது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆதரவை பெற்ற பைக்காக விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் பயணிக்க திறன் கொண்டதாக விளங்கும் என கூறப்பட்டுள்ளது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்

எல்டிஇ ஆதரவை பெற்ற முதல் ஏஐ கொண்ட ரிவோல்ட் பைக்கினில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

சரிவு திறன் சார்ந்த சோதனையில் (Gradient Ability Test) 10.2 டிகிரி கோணத்தில் உள்ள சரிவிலும் மிக இலகுவாக பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த பைக்கின் செயல்திறன், பேட்டரி லைஃப் சுழற்சி , ஆணி ஊடுருவல், அதிர்ச்சியை தாங்கும் திறன், அனைத்து காலநிலை சார்ந்த சோதனை மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் அம்சம் உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக ரிவோல்ட் அமைந்திருக்கும்.

100-125சிசி வரையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற ரிவோல்ட் பைக் விலை ரூபாய் 1.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்டமாக டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Exit mobile version