ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 பைக்கின் விலை உயர்ந்தது

0

rv400 e-bike

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், மின்சார பைக் மாடலான ஆர்வி400 மற்றும் ஆர்வி300 பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் முன்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாதந்திர இஎம்ஐ மாடல்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Google News

ரிவோல்ட் RV400

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300

அடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மற்றும் ஆர்வி 300 விலை உயர்வு

புதிய விலை பழைய விலை வித்தியாசம்
ரிவோல்ட் RV 400 ரூ.1,18,999 ரூ.1,03,999 ரூ.15,000
ரிவோல்ட் RV 300 ரூ.94,999 ரூ.84,999 ரூ.10,000
முன்பதிவு கட்டணம் பழைய கட்டணம் வித்தியாசம்
RV 400 ரூ.7,999 ரூ.3,999 ரூ.4,000
RV 300 ரூ.7,199 ரூ.2,999 ரூ.5,200

 

மை ரிவோல்ட் பிளான் மாதந்திர இ.எம்.ஐ கட்டண விபரம்

முன்பாக அறிவிக்கப்பட்டிருந்த மை ரிவோல்ட் பிளான் 38 மாத பிளான் இப்போது நீக்கப்பட்டு, 36 மாதமாக மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி கூடுதலாக 24 மாதங்கள் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரிவோல்ட் பிளான் (RV 400) Old My Revolt Plan (RV 400) வித்தியாசம்
24 months ( ரூ. 6,075 per month)
36 months ( ரூ. 4,399 per month) 38 months ( ரூ. 3,999 per month) ரூ. 400
New My Revolt Plan (RV 300) Old My Revolt Plan (RV 300) வித்தியாசம்
24 months ( ரூ. 4,383 per month)
36 months ( ரூ.3,174 per month) 38 months ( ரூ. 2,999 per month) ரூ.175