ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 மின்சார பைக் விநியோகம் துவங்கியது

rv 400 e-bike tamil

ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக் மாடல்களான ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என இரு மாடல்களும் டெல்லி மற்றும் புனே நகரங்களில் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டிற்கான விற்பனை நிறைவடைந்ததை தொடர்ந்து இனி முன்பதிவு செய்யப்படுகின்ற மாடல்கள் அனைத்தும் ஜனவரி, பிப்ரவரி மாதம் விநியோகிக்க துவங்கியுள்ளது.

புனே மற்றும் டெல்லி என இரு நகரங்களிலும் ஐந்து டீலர்களை கொண்டுள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் சென்னை, பெங்களூரு, ஹைத்திராபாத், நாக்பூர், அகமதாபாத் போன்ற நகரங்களில் தொடங்க உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 பேட்டரி விபரம்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ஆனது பைக்கினில் இருக்கும்போது சார்ஜ் செய்யவோ அல்லது (போர்டெபிள்) பேட்டரியை தனியாக எடுத்தும் சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டு, 15A ஆன் போர்டு சார்ஜர் வாயிலாக பேட்டரியை 4 மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும் நீங்கள் பயணித்தில் இருக்கும்போது திடீரென பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், உடனடியாக ரிவோல்ட் ஆப் வாயிலாக அருகில் உள்ள ஸ்வாப் பேட்டரி மையத்தை அனுகினால் உடனடியாக முழுமையான சார்ஜிங் உள்ள மாற்று பேட்டரி வழங்கப்படும். உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் கோரும் இடத்தில் வழங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது.

ஆர்வி400 மைலேஜ் மற்றும் வேகம்

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 156 கிமீ பயணம், 65 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  80 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது.

ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

rv 400 price in tamilnadu

ரிவோல்ட் ஆர்வி 300

அடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ஆர்வி 300 பைக்கில் 25 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடில் 150 கிமீ பயணம், 45 கிமீ வேகத்தில் பயணிக்க நார்மல் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ பயணம், மற்றும்  60 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் மோடில் அதிகபட்சமாக 80 கிமீ பயணிக்க என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. இந்த மாடலில் கிரே மற்றும் பிளாக் என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த பிரீமியம் வேரியண்டில் கூடுதலாக இலவசமாக முதல் மூன்று வருடங்களில் டயர் மட்டும் ஒரு முறை மாற்றித் தரப்படலாம்.

revolt rv400 tamil

ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963

ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963

(ஆன்ரோடு விலை)

ரிவோல்ட் ஆர்வி 400 ரூ .98,999 மற்றும் ஆர்வி 300 ரூ .84,999 (எக்ஸ்ஷோரூம்). கூடுதலாக ஆர்டிஓ பதிவு, வாகன காப்பீடு, மற்றும் மூன்று வருடத்திற்கான 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டினை இயக்குவதற்கு கட்டணம் ரூ.5,000 ஆகியவை வசூலிக்கப்பட உள்ளது.