Automobile Tamilan

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்

Royal Enfield Bullet Trials 350

பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடலின் பின்னணியில் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்  ட்ரையல்ஸ் 350 மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 500 என இரு மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 350 விலை ரூபாய் 1.62 லட்சம் மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ் 500 மாடல் விலை ரூபாய் 2.07 லட்சம் ஆகும். சாலைகள் மற்றும் சாலை இல்லா இடங்களில் பயணிக்க ஏற்றதாக ட்ரையல்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் ட்ரையல்ஸ்

மிக நீண்டகாலமாக தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்ற புல்லட் மாடலை கொண்டு 1940 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ட்ரையல் பயணங்களை நினைவுப்படுத்தும் வகையில், புதிய ட்ரையல்ஸ் வெளியிடப்பட்டுள்ளன.

350சிசி மற்றும் 500 சிசி என்ஜினில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. 19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மிக குறைந்த நீளம் பெற்ற மட்கார்டு, பின்புற இருக்கைக்கு மாற்றாக ஃபிரேம் சட்டத்தை பெற்று, புகைப்போக்கி மேல் நோக்கில் கோண வடிவில் அமைந்துள்ளது. இந்த மாடலில் ஆஃப் ரோடு அனுபவத்தை சிறப்பாக பெற சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் க்ரோம் மற்றும் சில்வர் நிற பூச்சினை கொண்ட பாகங்கள், புல்லட் மாடலில் இருந்து பெறப்பட்ட பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்களை கொண்டதாக விளங்குகின்றது.

சிவப்பு நிறத்திலான அடிச்சட்டத்தை பெற்ற புல்லட் ட்ரையல்ஸ் 350 மாடல் மற்றும் பச்சை நிறத்தை பெற்ற அடிச்சட்டத்தை கொண்ட புல்லட் ட்ரையல்ஸ் 500 மாடல் என இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது நீண்ட பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தனது புல்லட் ட்ரையல்ஸ் மாடல்களின் உந்துதலை 1940களில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரையல் மாடலை பின்பற்றியே வடிவமைத்துள்ளது.

Exit mobile version