இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் நீக்கப்பட்டது

re bullet trials

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றதாக வெளியிடப்பட்ட புல்லட் டிரையல்ஸ் பைக்கிற்கு போதிய வரவேற்பின்மை காரணமாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்க்குள் நீக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

புல்லட் ட்ரையல்ஸ் ஒர்க்ஸ் பிரதி 1948 மற்றும் 1965 க்கு இடையில் 50 க்கும் மேற்பட்ட சாம்பியன்ஷிப்பை வென்ற ஜொன்னி பிரிட்டனின் சோதனை மோட்டார் சைக்கிளால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

350சிசி மற்றும் 500சிசி என்ஜின் என இரண்டிலும் கிடைக்கின்ற டிரையல்ஸ் மாடலில் கிளாசிக் மற்றும் புல்லட்டில் பயன்படுத்த என்ஜின் பொருத்தப்படடுள்ளது.  19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஃப்ஐ என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது.

ரூ.1.67 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 500 பைக் விலை ரூ.2.07 லட்சத்தில் கிடைத்து வந்தது.