ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கில் ஏ.பி.எஸ் இணைப்பு

நடுத்தர ரக மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350 ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட பைக் 1.53 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக இந்த மாடலின் ரெட்டிச் எடிசன், கன் மெட்டல் கிரே மற்றும் சிக்னல்ஸ் போன்ற மாடல்களில் முன்பே டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், தற்போது அனைத்து மாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கின் சிறப்புகள்

பெரும்பாலான ராயல் என்ஃபீல்ட் மாடல்களில் டியூவல் சேனல் ஏ.பி.எஸ் பிரேக் இணைக்கப்பட்ட நிலையில், மிக விரைவில் புல்லட் 350 மற்றும் புல்லட் 350 ES பைக்கிலும் ஏ.பி.எஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது. ஆனால் ஏப்ரல் 1ந் தேதிக்கு முன்னதாக விற்பனைக்கு வரக்கூடும்.

கிளாசிக் 350 மாடலில் 346சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 19.8hp பவரையும், 28Nm டார்கையும் வழங்கும் ஏர் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கருப்பு, செஸ்நட் , ஏஸ் மற்றும் சில்வர் நிறங்களில் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ந் தேதி முதல் 125சிசி க்கு குறைந்த திறன் பெற்ற மாடல்கள் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக் 125சிசி க்கு அதிகமான மாடல்களில் பொருத்துவது கட்டாயமாகும். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக்கினை இணைக்க தொடங்கியுள்ளது.

சாதாரன மாடலை விட 6000 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டு, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் விலை 1.53 லட்சம் ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version