ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 750 & இன்டர்செப்டார் 750 விரைவில் அறிமுகம்

0

Royal Enfield Continental GT 750 and interceptor 750 spottedராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரிமியம் ரக பிரிவில் வரவுள்ள புதிய கான்டினென்ட்டல் ஜிடி 750 மற்றும் இன்டர்செப்டார் 750 பைக்குகள் வரும் நவம்பர் 7ந் தேதி EICMA 2017 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கான்டினென்ட்டல் ஜிடி 750

Royal Enfield Continental GT 750 spied

ஐரோப்பா நாடுகளில் சாலை சோதனை செய்யப்பட்டு வந்த கான்டினென்ட்டல் ஜிடி 750 பைக் சென்னையிலும் சாலை சோதனை செயப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிதாக வரவுள்ள இந்த பைக்கில் 750சிசி எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கின் வாயிலாக நடுத்தர பிரிமியம் செக்மென்ட் சந்தையில் என்ஃபீலடு நுழைய வாய்ப்பாக அமையும்.

இருவிதமான வகைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ள மாடல்களில் 1960-1970 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட 750சிசி எஞ்சின் பெற்ற ஸ்டீரிட் ரகத்தில் இன்டர்செப்டார் 750 மாடல் மற்றும் கஃபே ரேசர் மாடல் கான்டினென்ட்டல் ஜிடி 750 பெயரில் அறிமுகம் செயப்பட வாய்ப்புகள் உள்ளது.

Royal Enfield Continental GT 750 Engine spy

கான்டினென்ட்டல் 500 பைக்கில்  இடம்பெற்ற அதே அடிச்சட்டத்தில் சில மாறுதல்களை செய்து கூடுதலான டிசைன் அம்சங்களையும் புகுத்தி இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 48 ஹெச்பி பவரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் கிளப்மேன் ஹேண்டில்பார், வட்ட வடிவ இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் போன்றவற்றை பெறதாக வரக்கூடும் என சோதனை செய்யப்பட்டு வருகின்ற மாடல் வாயிலாக தெரிகின்றது. மேலும் பைரேலி டயர்களை பெற்றுள்ள இந்த பைக் இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Royal Enfield Continental GT 750 Rear Spied rear

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 மற்றும் ட்ரையம்ப் ஸ்டீரிட் ட்வீன் போன்ற மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 750 விலை ரூ.3.80 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படங்கள் உதவி – bikemedia and fb/behindthehandlebar