ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் 750சிசி எஞ்சினுடன் வருகை

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய 750சிசி எஞ்சின் மாடல் ஒன்றை நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட உள்ள நிலையில், அட்வென்ச்சர் ரக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் பெரிய எஞ்சின் பெற்ற மாடலை அறிமுக செய்ய உள்ளதாக சித்தார் லால் குறிப்பிட்டுள்ளார்.

ஹிமாலயன் 750சிசி

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பாரம்பரிய தோற்றம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வடிவமைப்பு அமைப்பில் சிக்கியுள்ள நிலையில், இவற்றை தாண்டி மிகப்பெரிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்திருந்த ஹிமாலயன் பைக் மாடலில் கூடுதல் திறன் மற்றும் சிசி பெற்ற பெரிய எஞ்சின் கொண்ட மாடல் 2019 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐஷர் மோட்டார்சின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் மேக்சின் என்ற பத்திரிக்கைக்கு சித்தார்த் லால் அளித்துள்ள பேட்டியில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 350சிசி மற்றும் 500சிசி மாடல்களின் மொத்த விற்பனையில் 500சிசி திறன் பெற்ற மாடல்களின் விற்பனை 10 சதவீதத்துக்கு கூடுதலாக இருந்து வருகின்றது.

எனவே, இந்தியர்களுக்கு ஏற்ற மற்றொரு பவர்ஃபுல்லான ஹிமாலயன் பைக் மாடலை அடுத்த 18 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் எந்தவொரு என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படாமல் மற்ற நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில், இதன் பின்னணி என்னவென்றால் இந்நிறுவனத்தின் முக்கிய சந்தையாக இந்தியா விளங்குகின்றது.

பெரிய எஞ்சின் பெற்ற மாடலாக ஹிமாலயன் வரும் என குறிப்பிட்டிருந்தாலும் எஞ்சின் சிசி பற்றி எவ்விதமான தகவலையும் உறுதி செய்யவில்லை. தற்போது ஹிமலயன் பைக் மாடலில் 410சிசி எஞ்சின் பெற்ற மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நவம்பர் 7ந் தேதி தொடங்க உள்ள EICMA 2017 அரங்கில் புதியதொரு ராயல் என்ஃபீல்டு 750சிசி எஞ்சின் பெற்ற மாடல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

Recommended For You