ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 & கான்டினென்டினல் ஜிடி 650 விலை உயர்வு

0

Royal Enfield interceptor Motorcycle

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் விலை ரூ.1,837 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிறகு முதன்முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பைக்குகளில் உள்ள 650 சிசி என்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 விலை

இன்டர்செப்டார் 650 (ஆரஞ்சு, சில்வர், மார்க் 3) – ரூ.2,66,755

இன்டர்செப்டார் 650 (ரெட், பேக்கர் எக்ஸ்பிரஸ்) – ரூ.2,74,643

இன்டர்செப்டார் 650 (கிளைட்டர்,டஸ்ட்) – ரூ.2,87,741

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 விலை

கான்டினென்டினல் ஜிடி 650 (பிளாக் மேஜிக், ப்ளூ) ரூ.2,82,513

கான்டினென்டினல் ஜிடி 650 (மேஹெம், வெள்ளை) ரூ.2,90,401

கான்டினென்டினல் ஜிடி 650 (மிஸ்டர் கிளின்) ரூ.3,03,544

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)