Automobile Tamil

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக் விற்பனைக்கு எப்போது ?

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக மீட்டியோர் என்ற பெயரில் முற்றிலும் புதிய என்ஜின் மற்றும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியிட இந்நிறுவனம் திடமிட்டுள்ளதாக தெரிகின்றது.

மீட்டியோர் என்ற பெயரை 1950 களிலே என்ஃபீல்டு நிறுவனம் பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு புதிதாக மீட்டியோர் தவிர ஷெர்பா, ரோட்ஸ்டெர், ஹண்டர், மற்றும் ஃபிளையிங் ஃபிளே போன்ற பெயர்களை மீண்டும் காப்புரிமை கோரி சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளது.

புதிய மாடல்களை J-பிளாட்ஃபாரத்தில் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு மாற்றாக புதிய பெயர் கொண்ட மாடல் மற்றொ,ரு குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என பல்வேறு மாடல்களை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. தற்போதைக்கு பிஎஸ்6 முறை என்ஜினாக முன்பாக உள்ள யூசிஇ என்ஜினையே பயன்படுத்தி உள்ளது.

விற்பனையில் உள்ள 650 ட்வீன்ஸ், ஹிமாலயன் 410 என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட உள்ள புதிய என்ஜின் 350சிசி க்கு கூடுதலாக அமைந்திருக்கலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மாடல்கள் பொதுவாக இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகின்றது. இஐசிஎம்ஏ 2020 கண்காட்சி தேதி வியாழன் 5 நவம்பர் 2020 – ஞாயிறு 8 நவம்பர் 2020 வரை இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற உள்ளது.

image source

Exit mobile version