ராயல் என்ஃபீல்டு ரெட்டிச் எடிசனில் டிஸ்க் பிரேக் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தொடர்ந்து பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை மேம்படுத்தி வரும் நிலையில் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு ரெட்டிச் எடிசனில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை (Royal Enfield Redditch Edition) இணைத்து அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்டிச் எடிசன் ரியர் டிஸ்க் விலை ரூ. 1.62 லட்சம் (ஆன்ரோடு தமிழ்நாடு) ஆகும்.

ராயல் என்ஃபீல்டு ரெட்டிச்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட என்ஃபீல்டின் கன் கிரே மெட்டல் நிறத்திலான கிளாசிக் 350 டிஸ்க் பிரேக்கினை தொடர்ந்து , ரெட்டிச் எடிஷன் என அறிமுகம் செய்யப்பட்ட ரெட்டிச் ரெட், ரெட்டிச் ப்ளூ, மற்றும் ரெட்டிச் க்ரீன் ஆகிய நிறங்களில் ரியர் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த மாடலில் தண்டர்பேர்டு 350 மற்றும் கன்கிரே மாடலில் இடம்பெற்றிருந்த ஸ்விங் ஆர்ம் பெற்று ரியர் டிஸ்க் பிரேக்கினை கொண்டதாக வரவுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பு, எஞ்சின் ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது.

 

ரெட்டிச்

1939 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் முதல் உற்பத்தி இடமாக விளங்கும் ரெட்டிச் (Redditch) பகுதியில் முதன்முறையாக 125சிசி மோட்டார்சைக்கிள் ராயல் பேபி மாடலின் ப்ரோட்டைப் தயாரிக்கப்பட்டது. மேலும் 1950 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பைக்குகளில் அடர்நிறங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட வந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ரெட்டிச் சிவப்பு , ரெட்டிச் பச்சை மற்றும் ரெட்டிச் நீலம் என மூன்று வண்ணங்களை பெற்ற ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனைக்கு வெளியானது.

இந்த மோட்டார்சைக்கிளில் 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஹெச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு சாக் அப்சார்பர்கள் இடம்பெற்று முன்பக்க டயரில் 280மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது.

 

ராயல் என்ஃபீல்டு ரெட்டிச் எடிஷன் விலை ரூ. 1.62 லட்சம் (ஆன்ரோடு தமிழ்நாடு )

Royal enfield redditch rear disc brake spotted in india. RE Redditch Rear disc priced at Rs. 1.62 lakhs (on-road Tamil Nadu )