ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350Xவருகின்ற பிப்ரவரி 28ந் தேதி ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற க்ரூஸர் ரக மாடல்களான ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மற்றும் தண்டர்பேர்ட் 500X ஆகிய இருமாடல்களும் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்X

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் க்ரூஸர் ரக மாடலான தண்டர்பேர்டு 350 மற்றும் 500 ஆகிய இரு மாடல்களில் கூடுதல் அம்சங்களுடன், தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டதாக வரவுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னதாக டீலர்களுக்கு வந்தடைந்த புதிய தண்டர்பேர்டு எக்ஸ் படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விற்பனைக்கு அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதை டீலர்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மாடலில் 10 ஸ்போக்குகளை கொண்ட அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர், ஃபிளாட் ஸ்டீயரிங் வீல், கருப்பு சைலென்ஸர் பெற்றதாக அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X

மற்றபடி தற்போது விற்பனையில் உள்ள தண்டர்பேர்டில் இடம்பெற்றுள்ள முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ளது. டீலர்களுக்கு வந்துள்ள பைக்குகள் தண்டர்பேர்டு 500X மாடல் ஆரஞ்சு , நீலம் வண்ணத்தில் தண்டர்பேர்டு 350X சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது. மேலும் புதிய மாடல்களுக்கு வின்ட்ஷீல்டு உள்ளிட்ட பல்வேறு விதமான ஆக்செரிஸ்களை வழங்க உள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்டர்பேர்ட் 350X பைக்கில் 19.8 bhp பவரை வெளிப்படுத்தும் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 28 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

தண்டர்பேர்ட் 500X பைக்கில் 27.2 bhp பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 41 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X

விற்பனையில் உள்ள தண்டர்பேர்டு 350 எக்ஸ் ரூ.1.72 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இந்த மாடலை விட ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்ட் 350X ரூ.8000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம். தண்டர்பேர்டு 500 எக்ஸ் ரூ.2.18 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இந்த மாடலை விட ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்ட் 500X ரூ.8000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.

(ஆன்-ரோடு தமிழ்நாடு)