ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்உலகின் மிக நீண்ட வராலாற்று பாரம்பரியத்தை கொண்டதாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மற்றும் தண்டர்பேர்ட் 500X ஆகிய இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்ட் X

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்

2002 ஆம் ஆண்டு முதல் க்ரூஸர் ரக சந்தையில் வலம் வருகின்ற ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளில், தற்போது பல்வேறு மாறுதல்கள் வழங்கப்பட்டு இருப்பதுடன் 117 ஆண்டுகால ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வராலாற்றில் முதன்முறையாக அலாய் வீல் மற்றும் ட்யூப்லெஸ் டயர் வழங்கியுள்ளது.

இரு மோட்டார்சைக்கிள்களிலும் தோற்ற அமைப்பினை தவிர வேறு எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றமும் வழங்கப்படவில்லை. தண்டர்பேர்ட் 350X பைக்கில் 19.8 bhp பவரை வெளிப்படுத்தும் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 28 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்

 

தண்டர்பேர்ட் 500X பைக்கில் 27.2 bhp பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 41 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

விற்பனையில் உள்ள தண்டர்பேர்டில் இடம்பெற்றுள்ள முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றதாகவே தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் தோற்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் மற்றும் நிறங்களை அறிந்து கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்

தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலில் வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களை தவிர தண்டர்பேர்டு 500எக்ஸ் மாடலில் நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறத்துடன் கருப்பு வண்ண கலவையை பெற்றுள்ள இரு மாடல்களில் பெரிய மாற்றமாக இரு பிரிவு இருக்கை அமைப்பிற்கு மாற்றாக ஒற்றை இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் அமைப்புடன் முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுடன் கூடுதல் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தண்டர்பேர்டு எக்ஸ் பைக் சாதாரண மாடலை விட ரூ.8000 வரை கூடுதலாக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X – ரூ. 1.72 லட்சம்

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X – ரூ. 2.18 லட்சம்

(ஆன்ரோடு தமிழ்நாடு )

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட்