Automobile Tamilan

பெண்கள், இளைய தலைமுறையினருக்கு புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வருகை..,

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் உட்பட அனைத்து மாடல்களும் மிக அதிக எடையுடன் விளங்கும் நிலையில் இதற்கு மாற்றாக பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையில் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மோட்டார்சைக்கிள் ஒன்றை என்ஃபீல்டு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக இலகு எடை மற்றும் குறைவான உயரம் கொண்டவர்களும் ஓட்டும் வகையில் குறைந்த இருக்கை உயரம் பெற்ற தனது மாடலை J1C என்ற குறீயிட்டு பெயரில் தயாரித்து வருகின்றது. மேலும் இந்த மாடல் 346 சிசி என்ஜினை பெறுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. இதற்கு கீழான சிசி என்ஜினை ராயல் என்ஃபீல்டு தயாரிக்க வாய்ப்பில்லை.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஆரம்ப விலை ரூ.1.12 லட்சம் கிடைக்கின்ற நிலையில், இது பிஎஸ்6 நடைமுறைக்கு மாற்றும்போது அனேகமாக ரூ.10,000-ரூ.15,000 விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், புதிதாக தயாரிக்க உள்ள மாடல் புல்லட்டை விட விலை குறைவாக அமைய வாய்ப்புகள் உள்ளது.

பிஎஸ்6 மாடல்களை ஜனவரி இறுதியில் ராயல் என்ஃபீல்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் மத்தியில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹண்டர் என்ற பெயரில் இந்த குறைந்த விலை மற்றும் எடை கொண்ட மாடல் வெளியாகலாம். அதேபோல தற்போது சோதனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு போன்ற புதிய தலைமுறை மாடல்களும் வரவுள்ளது.

(ஆதாரம் – etauto)

Exit mobile version