ராயல் என்ஃபீல்ட் பிஎஸ் 6 பைக்குகளின் வருகை விபரம் வெளியானது

0

royal enfield bullet 500 abs

சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் , பிஎஸ் 6 மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட என்ஃபீல்ட் பைக்குகளின் அறிமுகத்தை ஏப்ரல் 1,2020 க்கு முன்னதாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிமுறையில் செயல்படும் என்ஜினை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி பனிகளை தொடங்கிய நிலையில், தற்போது இந்த மாசு விதிகளுக்கு ஏற்ற என்ஜின் உற்பத்தி நிலைக்கு எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது விற்பனை செய்யப்படுகின்ற புல்லட், கிளாசிக், தன்டர்பேர்டு ஹிமாலயன் உள்ளிட்ட மாடல்களின் என்ஜின் பிஎஸ் 6 தரத்துக்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வரவுள்ள புதிய நிதி வருடத்தில் ராயல் என்ஃபீல்ட் பைக் நிறுவனம், சில புதிய பைக் மாடல்கள் மற்றும் பிஎஸ் 6 என்ஜின் உட்பட பல்வேறு முக்கிய மேம்பாடுகளை செய்ய உள்ளது. மேலும் சமீபத்தில் என்ஃபீல்ட் தலைமை நிறுவனமான ஐசர் ரூ.500 கோடி முதலீட்டை சென்னையில் மேற்கொள்ள உள்ளதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்திருந்தது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், தனது புல்லட் முதல் ஹிமாலயன் வரை விற்பனையில் உள்ள மாடல்களின் விலையை ரூ.1500 வரை உயர்த்திருந்தது. மேலும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமாக விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது.