Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு 650சிசி க்ரூஸர் பைக்கின் ஸ்பை படம் வெளியானது

முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் KX கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற 650சிசி க்ரூஸர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. முற்றிலும் புத்தம் புதிய ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் பல்வேறு புதிய மாடல்கள் அடுத்த சில ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் அவற்றில் மீட்டியோர் 350 செப்டம்பர் மாதமும், அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் புதிய கிளாசிக் 350 பைக் வெளியாக உள்ளது. இதுதவிர, ஹண்டர் அல்லது செர்ப்பா என்ற பெயரில் ஒரு ரோட்ஸ்டெர் என்ற மாடலை சோதனை செய்து வருகின்றது. இந்நிலையில், புத்தம் புதிய ட்வீன் சிலிண்டர் பெற்ற க்ரூஸர் ஸ்டைல் மாடல் காட்சிக்கு கிடைத்துள்ளது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள புதிய ட்வீன் சிலிண்டர் பெற்ற க்ரூஸர் ரக மாடலில் இடம்பெற உள்ள என்ஜின் முன்பாக கான்டினென்ட்டினல் ஜிடி 650 மற்றும் இண்டர்செப்டார் 650 போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது. ரைடரின் பொசிஷன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு கால்களை என்ஜின் கேஸ் பகுதிக்கு முன்புறத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் இரு பிரிவுகளை கொண்ட கிளஸ்ட்டர், யூ.எஸ்.டி ஃபோர்க்கு, பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர், அகலமான டயரை பெற்று அலாய் வீல் கொண்டுள்ளது.

தற்போது துவக்க நிலை உற்பத்தி மாடலாக அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு 650சிசி க்ரூஸர் பைக் முழுமையாக மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளுடன் அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியாகலாம்.

image source karthick jay

Exit mobile version