சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மிக விரைவில் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் வெளியிடப்பட உள்ள சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்

ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் மேக்ஸி ரக ஸ்கூட்டரை சுஸூகி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் விற்பனைக்கு வரவுள்ளது.

மேக்ஸி ஸ்கூட்டர்

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி பர்க்மேன் ஸ்கூட்டர் 125 cc, 200 cc, 250 cc, 400 cc மற்றும் 600 cc என பல்வேறு மாறுபாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் விற்பனையில் உள்ள சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி எஞ்சினை பெற்ற மாடலாக மிக நேர்த்தியான அகலமான முன்புற அப்ரான் கொண்டு வின்ட்ஸ்கீரின் பெற்று விளங்குகின்றது.

எஞ்சின்

8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கின்றது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த பிரேக்கிங் அமைப்பினை கொண்டதாக விளங்கும்.

சிறப்பு வசதிகள்

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்கும்.

போட்டியாளர்

தற்போது அப்ரிலியா SR125,  டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்வதுடன் ஹோண்டா கிரேஸியா மற்றும் வரவுள்ள 125சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல்களை பர்க்மென் ஸ்கூட்டர் எதிர்கொள்ள உள்ளது.

விலை

சுசூகி பர்க்மென் ஸ்கூட்டர் 125 விலை ரூ. 70,000 ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை19ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

 

Exit mobile version