ஸ்டைலிஷாக வெளியாக உள்ள சுசுகி ஜிக்ஸர் SF 250 ஸ்பெஷல் என்ன.?

0

Suzuki Gixxer 250 bike patent

வருகின்ற 20 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுகின்ற புதிய சுசுகி ஜிக்ஸர் SF 250 மோட்டார்சைக்கிளில் இடம்பெற உள்ள என்ஜின் மற்றும் வசதிகள், விலை தொடர்பான எதிர்பார்ப்புகளை சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.

Google News

முன்பாக இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஜிக்ஸர், ஜிக்ஸர் SF வெற்றியை தொடர்ந்து அடுத்த மாடலாக நேக்டு ஸ்போர்ட்டிவ் மற்றும் ஃபேரிங் ரகம் என இரு பிரிவுகளில் வெளியிட உள்ளது.

சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக் சிறப்புகள்

சர்வதேச அளவில் சுசுகி GSX250R  என அழைக்கப்பட வாய்ப்புகள் உள்ள இந்த மாடலில் ஆயில் கூலிங் சிஸ்டத்தை பெற்ற 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

ஸ்டைல்

மிக நேர்த்தியான ஜிக்ஸர் வரிசையின் மேம்படுத்தப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றதாக வரவுள்ள இந்த பைக்கின் தோற்றம் பிரபலமான உயர் ரக GSX-S750  மற்றும் GSX-S1000 போன்ற மாடல்களின் தோற்ற உந்துதலில் ஒரு ஸ்டைலிஷான மற்றும் பல்வேறு டிஜிட்டல் அம்சங்களை உள்ளடக்கியதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எல்இடி ஹெட்லைட், டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சம் வழங்கப்பட்டிருக்கலாம்.

Suzuki Gixxer SF 250 tamil

Suzuki Gixxer SF 250 specs

motoroids

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25 மாடலுக்கு நேரடியான போட்டியாகவும், டியூக் 250 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும். இதுதவிர ஃபேரிங் செய்யப்பட்ட மாடலையும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

விலை

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஜிக்ஸர் 250 பைக்கின் விலை ரூ. 1.35 லட்சம் முதல் ரூ.1.50 லட்சத்தில் விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki Gixxer 250 teased