சுசுகி GZ150 க்ரூஸர் பைக் இந்தியாவில் களமிறங்குகின்றதா ?

தொடக்க நிலை க்ரூஸர சந்தையில் புதிய சுசுகி GZ150 க்ரூஸர் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர சுசுகி மோட்டார்சைக்கிள் திட்டமிட்டுள்ளது. GZ150 க்ரூஸர் பைக் விலை ரூ. 85,000 விலையில் அமையலாம்.

சுசுகி GZ150 க்ரூஸர் பைக்

இந்திய சந்தையில் ஜிக்ஸெர் பைக் மூலம் 150சிசி சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பெற்று வரும் நிலையில் 250சிசி மாடலை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய தகவல் ஒன்றை பைக்அட்வைஸ் தளம் வெளியிட்டுள்ளது.

150சிசி சந்தையில் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF  இரண்டும் பெற்ற வெற்றியை தொடர்ந்து தொடக்கநிலை க்ருஸர் சந்தையில் விற்பனையில் உள்ள பஜாஜ் அவென்ஜர் பைக்கிற்கு இணையான சவாலினை ஏற்படுத்தும் விலையில் ஜிஇசட் 150 மாடல் அமையலாம். இந்தியாவில் 150சிசி மற்ற்றும் 220சிசி என இரண்டிலும் கரூஸர் ரக மாடலில் அபரிதமான வரவேற்பினை பெற்றதாக விளங்கும் அவென்ஜருக்கு நிச்சியமாக சவாலாக சுசுகி ஜிஇசட் 150 மாடல் அமையலாம்.

 

சுசுகி GZ150 பைக் விபரம்

வட்ட வடிவ முகப்பு விளக்கு , கிளாசிக் டிசைன் என க்ரூஸருக்கு உரித்தான அம்சங்களுடன் ஸ்பிளிட் செய்யப்பட்ட இரு இருக்கைகள் என ஜிஇசட்150 சோப்பர் மாடலாக விளங்குகின்றது.

சசூகி GZ150 பைக்கில் 15.42 hp பவரை வெளிப்பட்டுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு SOHC 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 11.20 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜிஇசட் 150 பைக்கின் நீளம் 2,250மிமீ, அகலம் 900மிமீ மற்றும் உயரம் 1,160மிமீ பெற்று இருக்கையின் உயரம் 710 மிமீ கொண்டதாக உள்ளது. இந்த பைக்கின் எடை 137 கிலோ கிராம் ஆகும். முன்புறத்தில் 18 அங்குல அலாய் சக்கரம் மற்றும் பின்புறத்தில் 16 அங்குல அலாய் சக்கரம் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனுடன் விளங்குகின்றது.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் முன்புறத்திற்கு வழங்கப்பட்டு சாக் அப்சார்கள் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.

வருகை மற்றும் விலை

வியட்நாம், கொலம்பியா போன்ற நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தேசங்களில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ.93,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட்டால் சசூகி GZ150 பைக் விலை ரூ. 82,000 முதல் ரூ. 87,000 விலைக்குள் அமையும் என்பதனால் அவென்ஜருக்கு நெருக்கடியாகவே அமையும்.

இந்திய சந்தைக்கு வருவதனை டீலர் வாயிலாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள வரும் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆண்டின் இறுதி மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Recommended For You