ரூ.1.06 லட்சத்தில் சுசூகி இன்ட்ரூடர் FI பைக் விற்பனைக்கு வெளியானது

0

suzuki intruder bike launchedசுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த க்ரூஸர் ரக இன்ட்ரூடர் அடிப்படையிலான சுசூகி இன்ட்ரூடர் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்ற மாடல் ரூ.1.06 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சுசூகி இன்ட்ரூடர் FI

Suzuki Intruder 150 Front Quarter

Google News

தொடக்கநிலை க்ரூஸர் சந்தையில் மிகவும் ஸ்டைலிஷாக சிறப்பான அம்சங்களை பெற்றதாக கார்புரேட்டர் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட இன்ட்ரூடர் பைக் ரூ.99,995 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது எஃப்ஐ பெற்ற மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

க்ரூஸர் ரக அவென்ஜர் மாடலுக்கு எதிராக மிகவும் சவாலான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாடர்ன் பவர் க்ரூஸர் இன்ட்ரூடர் 150 மாடலில் புராஜெக்டர் எல்இடி முகப்பு விளக்கு,எல்இடி டெயில் விளக்கு பெற்றிருப்பதுடன் பிரிமியம் தோற்ற பொலிவினை கொண்டுள்ளது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 740 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ளதால் பெரும்பாலான மக்களுக்கு ஏற்ற வகையிலும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

Suzuki Intruder 150 front disc

ஜிக்ஸெர் 150 பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை இன்ட்ரூடர் மாடல் பெற்றிருக்கின்றது. அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்த மாடலில் இடம்பெற்றுள்ள FI யூனிட் மிக சிறப்பான வகையில் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் சார்ந்தவற்றை திராட்டில் ரெஸ்பான்ஸை பொருத்து வழங்கும் வகையில் 6 சென்சார்களை கொண்ட Suzuki Advanced Fuel Injection நுட்பத்தை பெற்றதாக வந்துள்ளது.

முன்புறத்தில் புராஜெக்டர் எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள், டிஜிட்டல் இண்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் கூடிய  நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான தன்மையை கொண்ட இரட்டை பிரிவு இருக்கை அமைப்பை பெற்றதாக விளங்குகின்றது.

Suzuki Intruder 150 Side

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இருபுற சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருப்பதுடன், முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் அம்சத்துடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளது.

சுசூகி இன்ட்ரூடர் FI விலை ரூ. 1.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Suzuki Intruder 150 Rear Quarter