Site icon Automobile Tamil

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018

இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் பல ஆண்டுகளாக முன்னணி வகித்த ஸ்பிளென்டர் மாடல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முதலிடத்தை தவறவிட்டிருந்த நிலையில் மார்ச் 2018 மாதந்திர விற்பனையில் மீண்டும் ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தை பெற்று ஆக்டிவா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் விற்பனையில் டாப் 10 பைக்குகள் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018

கடந்த ஒரு வருடமாக ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனமாக விளங்கி வந்த நிலையில், தற்போது முதலிடத்தை ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் வரிசை மாடல்களிடம் இழந்துள்ளது.

குறைந்தபட்ச வித்தியாசம் பெறாமல் 50,000 எண்ணிக்கையில் கூடுதலான விற்பனையை ஸ்பிளென்டர் பதிவு செய்து 2,62,332 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஆக்டிவா ஸ்கூட்டர் 2,07,536 ஸ்கூட்டருகளை விற்பனை செய்துள்ளது. மேலும் ஹீரோ நிறுவனத்தின் ஹெச்எஃப் டீலக்ஸ், ஹீரோ பேஸன் மற்றும் ஹீரோ கிளாமர் 125 ஆகிய பைக்குகள் இடம்பெற்றுள்ளது.

125சிசி சந்தையில் ஹோண்டா சிபி ஷைன் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. இதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 78,413 மொபட்கள் விற்பனையாகி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

ஸ்போர்ட்டிவ் பல்சர் வரிசை மாடல்கள் தொடர்ந்து சந்தையில் சராசரியாக மாதந்தோறும் 50,000 எண்ணிக்கைக்கு கூடுதலாக விற்பனையாகி வருகின்றது. உலகின் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு மாடல்கள் அமோக விற்பனையை அடைந்து வருகின்றது. அந்த வரிசையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 10வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 மார்ச் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

டாப் 10 பைக்குகள் – மார்ச் 2018

வ.எண் மாடல் மார்ச் -2018 பிப்ரவரி -2018
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,62,232 2,38,722
2 ஹோண்டா ஆக்டிவா 2,07,536 2,47,377
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,83,162 1,65,205
4 ஹீரோ பேஸன் 1,05,214 61,895
5 ஹோண்டா CB ஷைன் 81,770 82,189
6 டிவிஎஸ் XL சூப்பர் 78,413 71,931
7 ஹீரோ கிளாமர் 72,054 66,064
8 டிவிஎஸ் ஜூபிடர் 65,308 63,534
9 பஜாஜ் பல்சர் வரிசை 53,507 60,772
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 50,111 48,557

 

 

Exit mobile version