Automobile Tamil

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

அப்பாச்சி வரிசையில் விற்பனை செய்யப்படுகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 பைக்கில் உள்ள பல்வேறு மிக முக்கிய அம்சங்களில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவலை தொகுத்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் பவரை வழங்கும் என்ஜின்

முன்பாக பிஎஸ்4 என்ஜினை விட கூடுதலாக பவரை வழங்குகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ஒற்றை சிலிண்டருடன் ரேஸ் திராட்டில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டு இப்போது அதிகபட்சமாக 6.6hp பவரை 8,500rpm-லும்  15.5Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

டிசைனில் மாற்றமில்லை

டிசைனில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படாமல், வழக்கமான அதே தோற்றம் மற்றும் நிறத்தைப் பெற்றுள்ள அப்பாச்சி 180 மாடலில் வீல்பேஸ் 36 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 கிலோ வரை எடை அதிகரித்து 141 கிலோவாக உள்ளது. 790 மிமீ இருக்கை உயரத்தை கொண்டுள்ள இந்த மாடலில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.

டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 270 மிமீ பிட்டில் டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 200 மிமீ டிஸ்க் உடன் ட்வீன் ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

புதிய வசதிகள்

அப்பாச்சி வரிசையில் தற்போது இடம்பெற்று வருகின்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் திராட்டில் ரெஸ்பான்ஸ் இல்லாமல் கிளட்சினை தொடும்போதே மிக குறைந்த வேகத்தில் பயணிக்க அனுமதிக்கும் GTT (Glide Through Traffic) நுட்பத்தை கூடுதலாக இணைத்துள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா எக்ஸ்பிளேடு உட்பட பல்சர் 180, மற்றும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

விலை

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்4 மடலை விட ரூ. 6,704 வரை விலை உயர்த்தப்பட்டு, தற்போது தமிழகத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 விலை ரூ.1,03,750 ஆக எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version