பிஎஸ்6 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 விற்பனைக்கு வெளியானது

2020 TVS Apache RTR 180

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிஎஸ்6 மாடல் வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விற்பனைக்கு ரூபாய் 1 லட்சத்து ஆயிரம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த பிஎஸ்4 மாடலை விட ரூ. 6,704 உயர்த்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. தொடர்ந்து இந்த மாடலில் உள்ள 177.4cc ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வு, ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 16.6hp பவரை 8,500rpm-லும்  15.5Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட கூடுதலான பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.

டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 270 மிமீ பிட்டில் டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 200 மிமீ டிஸ்க் உடன் ட்வீன் ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

போக்குவரத்து நெரில் மிகுந்த நேரங்களில் மிக சிறப்பான முறையில் டூ வீலரை இயக்க அனுமதிக்கும் GTT (Glide Through Traffic) நுட்பத்தை கூடுதலாக இணைத்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பிஎஸ்6 – ரூ.1.01 லட்சம்