டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகை விபரம்

tvs jupiter millionR editionதமிழகத்தை மையமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் இருசக்கர வாகன சந்தையில் பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வரிசையில் டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அடுத்த சில மாதங்களில் வெளியிட உள்ளது.

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது ஸ்கூட்டர் சந்தையில் டி.வி.எஸ் ஜூபிடர், வீகோ மற்றும் ஸெஸ்ட் ஆகிய மாடல்களின் வாயிலாக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள டிவிஎஸ் ஸ்கூட்டர் சந்தை பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கதாகும். 57 வது இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் கூட்டத்தில் கலந்த கொண்ட டிவிஎஸ் மோட்டார் தலைவர் மற்றும் சி.இ.ஓ கே.என். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்டோ என்டிடிவிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர் பற்றி தகவலை வெளியிட்டுள்ளார்.

tvs jupiter classic scooter

எங்களுடைய ஆர்&டி பிரிவு மிக சிறப்பான செயல்திறனை கொண்டிருக்கும் நிலையில் மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் முழுமையான ஸ்கூட்டர் மாடல் ஒன்றை உருவாக்குவதில் மிக தீவரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். விற்பனையில் உள்ள எமது மாடல்களின் தோற்ற அமைப்பில் அமைந்திருக்க வாய்ப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த 6 முதல் 9 மாதங்களில் சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளர்.

டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர் பவர் மற்றும் டார்க் , பேட்டரி ரேன்ச் ஆகிய விபரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது சற்று விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TVS WEGO scooter

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

TVS Scooty Zest 110 Himalayan Highs side