குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

0

tvs jupiter smw scooter

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டரில் குறைவான விலையில் SMW (Sheet Metal Wheel) பெற்ற வேரியன்ட் ரூ.67,420 (எக்ஸ்ஷோரூம் சென்னை) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

ஜூபடரில் 109.7சிசி ET-Fi (Ecothrust Fuel injection) தொழில்நுட்பத்துடன் 7.33 BHP மற்றும் 8.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. தற்போது இடம்பெற்றுள்ள புதிய வேரியண்டில் சீட் மெட்டல் வீல் இணைக்கப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களில் 130 மிமீ டிரம் பிரேக் உடன், கூடுதலாக சிங்க் பிரேக் டெக்னாலஜி சேர்க்கப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற ஐ-டச் ஸ்டார்ட் அமைப்பினை பெற்று ஸ்டார்ட்டிங் சமயத்தில் ஏற்படுகின்ற இரைச்சலை குறைப்பதுடன், பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆல் -இன்-ஒன்-லாக் வசதியை பெற்றதாக அமைந்துள்ளது. அதாவது எரிபொருள் நிரப்புவதற்கு திறக்க, இருக்கையின் அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதிகும், இக்னிஷன் என அனைத்திற்கும் ஒரே சாவி மூலம் திறக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூபிடர் SMW – 67,420

ஜூபிடர் – ரூ.69,420

ஜூபிடர் ZX – ரூ.72,170

ஜூபிடர் ZX டிஸ்க் – ரூ.76,270

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 76,465

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)