டிவிஎஸ் ஃபியரோ 125 அறிமுகம் எப்போது ?

0

tvs sport headlight 1

மீண்டும் 125சிசி சந்தையில் களமிறக்க காத்திருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய மாடல் ஃபியரோ 125 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Google News

இந்நிறுவனம் 125சிசி சந்தையில் விற்பனை செய்த விக்டர் 125, ஃபிளேம் SR125 மற்றும் ஃபினிக்‌ஷ் 125 ஆகியவற்றை நீக்கியப் பிறகு மீண்டும் 125சிசி சந்தையில் மிக சிறப்பான பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக புதிய பைக்கினை ஃபியரோ 125 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் Fiero 125 என்ற பெயரை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

சுசூகி-டிவிஎஸ் மோட்டார் நிறுவன கூட்டணியில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஃபியரோ 150சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற 125சிசி பைக்குகளான ஹோண்டா எஸ்பி 125, பல்சர் 125, கிளாமர் 125 , ஷைன் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

தற்போது காப்புரிமை கோரிய விண்ணப்பம் பதிவு ஆகியுள்ளதால், 2021 ஆம் ஆண்டின் மத்தியில் பல்வேறு வசதிகளுடன் மிகவும் ஸ்டைலிஷான டிவிஎஸ் ஃபியரோ 125 விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இதுதவிர டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் க்ரூஸர் ஸ்டைல் செப்பெலின் மற்றும் செப்பெலின் ஆர் (TVS Zepplin R), எலக்ட்ரிக் ரக ரெட்ரான் (TVS Retron), அட்வென்ச்சர் ஸ்டைல் ரைடர் (TVS Raider) ஆகிய பெயர்களை பதிவு செய்துள்ளது.

web title : TVS Motor registers fiero 125 name