Site icon Automobile Tamil

ரூ 48,400 விலையில் டிவிஎஸ் ரேடியான் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது புத்தம் புதிய 110cc பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் ரேடியான் என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளின் துவக்க விலையாக 48 ஆயிரத்து 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). டிவிஎஸ் ரேடியான் மோட்டார் சைக்கிள்கள் முழுவதுமாக புதிய டிசைனில், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் மோட்டார் சைக்கிள், புதிய சேஷ்கள் மற்றும் சிங்கிள் கிரிடல் டுயூப்ளர் பிரேம் உடன் கிடைக்கிறது. டிவிஎஸ் ரேடியான்கள், இந்தியாவில் உள்ள சிறிய நகரம் அல்லது ரூரல் பகுதிகளில் வாகனம் ஓட்டும் 25 முதல் 35 வயதுடையவர்களுக்காக ஏற்றதாக உள்ளது.

டிவிஎஸ் ரேடியான்கள், டிவிஎஸ் ஸ்டார்சிட்டி+-ல் உள்ள பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், 109.7cc, சிங்கிள்-சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்டசமாக 7,000rpm-ல் 8.3bhp ஆற்றலும், 8.7Nm பீக் டார்க்யூவில் 5,000rpm-ஆக இருக்கும். இந்த 110cc பயணிகள் பைக், 69.3kmpl ஆக இருக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேடியான் மோட்டார் சைக்கிள்கள், பிரேகிங் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப காரணமாக பைக் செல்லும் போது ஏற்படும் போது ஸ்கிட்டிங் ஆவது தவிர்க்கப்படுகிறது. டிவிஎஸ் ரேடியான்களின் டெலிவரி அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ள டிவிஎஸ் நிறுவனம், முதல் ஆண்டில் 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது. ரேடியான்கள், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மோட்டர் சைக்கிளான ஹீரோ ஸ்பிளண்டருக்கு போட்டியாக இருக்கும்.

டிவிஎஸ் ரேடியான்கள் முதன்முதலில் 2012 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலுக்கும், தற்போது விற்பனைக்கு தயாராகி விற்பனைக்கு வந்துள்ள மாடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்ட மாடலில் 125cc இன்ஜின் இருந்தது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாடல்களில் 110cc இன்ஜின் ஆற்றலுடன் வெளி வந்துள்ளது. கூடுதலாக, இந்த் பைக்கின் ஸ்டைல் மற்றும் டிசைன், டிவிஎஸ் அப்பாச்சி மாடல்கள் போலவே வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version